இந்தியாவை வீழ்த்தி பைனல் சென்றது ஆப்கானிஸ்தான்!

2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.நாணய…

2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு 207 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்கள் குவித்தது. ஆப்கானிஸ்தானின் அதிரடிக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியில் ரமன்தீப் சிங் மட்டும் 64 ஓட்டங்கள் எடுத்து போராடினார்.

இதன் மூலம் இந்திய அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இறுதிப் போட்டி அக்‌டோபர் 27 அன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.