மாணவர்களுடைய வருகை பதிவேடு குளறுபடி காரணமாக அரசு ஆதிதிராவிடர் நல பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை இளைஞர்நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற
உணவு வகைகள் மற்றும் பொருட்கள் இருப்பு குறித்த கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளில் குளறுபடி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து வார்டனை முருகனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டார்.







