நடிகை பார்வதியின் பிறந்தநாள்…போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘தங்கலான்’ படக்குழு!

நடிகை பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இப்படத்தில் பார்வதி,  மாளவிகா மோகனன்,  பசுபதி…

நடிகை பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இப்படத்தில் பார்வதி,  மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 17-ஆம்  நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த மக்களின் போராட்ட கதையை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.  ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் உள்ளது.  இந்தநிலையில், நடிகை பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

https://twitter.com/beemji/status/1776840076648968235

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.