அரசு பேருந்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் – வீடியோ வைரல்!

அரசு பேருந்தில் குடிபோதையில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறி அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரை நடத்துநரும் பொதுமக்களும் இணைந்து கால்களால் எட்டி உதைத்து கீழே இறக்கி விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி…

அரசு பேருந்தில் குடிபோதையில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறி
அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரை நடத்துநரும் பொதுமக்களும் இணைந்து கால்களால் எட்டி உதைத்து கீழே இறக்கி விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கும்பகோணத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று இரவு நேரத்தில் மயிலாடுதுறை
நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவழியில் ஏறிய நபர் சீட்டில்
அமர்ந்த பின்பு டிக்கெட் எடுக்க காசு இல்லை என்று கூறி போதையில் தகாத
வார்த்தைகளுடன் அளப்பறையில் ஈடுபட்டுள்ளார்.

பேருந்து நடத்துநர் பலமுறை கூறியும் அவர் டிக்கெட் எடுக்காமல் கீழே இறங்கவும் மறுத்து விட்டார். ஒரு கட்டத்தில் நடத்துனருக்கும் போதை ஆசாமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்க முற்பட்டார்.

அவர் மறுத்து விடவே வலுக்கட்டாயமாக அவரை தள்ளிக் கொண்டு படிக்கு சென்றனர். நடத்துநரின் உதவிக்கு வந்த சில பயணிகள் போதை ஆசாமியை கால்களால் எட்டி கீழே உதைத்து வெளியே தள்ளினர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.