ஆதிபுருஷ் திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆதிபுருஷ் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் நடிகர் பிரபாஸின் சினிமா பயணத்தில் புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது








