சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி, வெறும் எட்டு ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவாசல்,
சிறுவாச்சூர், கருமந்துறை, மணியார்குண்டம், கரியக்கோவில், தும்பல்,
தம்மம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் தக்காளி
சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையக்கூடிய காய்கறிகளை அறுவடை செய்யும்
விவசாயிகள் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு
கொண்டு சென்று விற்பனை செய்து வருவது வழக்கம், இன்னிலையில் தமிழகத்தில்
கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி நல்ல விளைச்சல்
கண்டுள்ளது.
இன்னிலையில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து தலைவாசல்
தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை
கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ 200
ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது மளமளவென விலை வீழ்ச்சியடைந்து.
மொத்த விலையில் தரத்திற்கேற்ப ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கும்,
27 கிலோ அடங்கிய பெட்டி ஒன்று 200ரூபாய் முதல் 270 ரூபாய் வரைக்கும் சில்லறை
விலையில் தரத்திற்கேற்ப 10 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை விற்பனையானதால்
விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.







