வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறை்பாடு, சரும பிரச்னைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. 100 கிராம் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக உடலுக்கு 53.2 மில்லி கிராம் முதல் 53 மில்லி கிராம் வரையிலான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது
வைட்டமின் சி சத்து நிறைந்த பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களில் அன்னாச்சியும் ஒன்று. இதில் 79 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமை அளிக்கிறது
ஒரு கப் பப்பாளியில் 88 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே இதை உணவில் சேர்த்துக் கொள்வது அதிக அளவிலான வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்
கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யா பழத்தில் 126 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ளது
அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. ஒரு துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது
சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது