நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது? வயநாட்டில் நடந்தது என்ன?

கனமழை, நிலநடுக்கம்  போன்ற இயற்கை காரணங்களாலும், ஆக்கிரமிப்புகள், காடுகள் அழிப்பு, பயிர் முறைகளில் மாற்றம் போன்ற  பல்வேறு காரணிகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன

கடந்த 40 வருடங்களில், 9000 சதுர கிலோமீட்டர் காடுகளை கேரளா இழந்துள்ளது என்று கூறுகிறார் வயநாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் 40% கேரளாவில் தான் உள்ளது. அது மட்டுமல்லாது கேரள மாநிலத்தின் 44 நதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மட்டுமே 41 நதிகள் உருவாகின்றன

கடந்த ஆண்டு இஸ்ரோ வெளியிட்ட ஆய்வின்படி இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 30 மாவட்டங்களில் 10 கேரளாவில் உள்ளன, வயநாடு 13-வது இடத்தில் உள்ளது

மலைப்பகுதிகளில் செம்மண் அடுக்குகளில் ஏற்படும் நிலச்சரிவு, 'டெப்ரிஸ் புளோ லேண்ட் ஸ்லிப்' என சொல்லப்படுகிறது. தற்போது, வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, இந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம்

வயநாட்டில் மலைகளில் செம்மண் அடுக்குகளில், அதிகபட்ச வெள்ள நீர் உள்வாங்கியதால், நிலச்சரிவு ஏற்பட்டதாக, பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக அளவு நீர் உள்வாங்கப்படும் நிலையில், அது வெளியேறும் வழி, எங்காவது தடைபட்டிருக்கலாம். இதனால், மழைநீர் உள்ளேயே தங்கும்போது, மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து, குழைவுத் தன்மை ஏற்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கும்போது, அந்த மலையில், குறிப்பிட்ட சில பகுதிகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விடுகின்றன.

மாநில எல்லைகளை கருத்தில் கொள்ளாமல், அக்கம் பக்கத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பேரிடர் மேலாண்மைக்கான கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிவாரண உதவிகளை விரைவாக திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

வயநாட்டில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு அபாயம், நீலகிரி மாவட்டத்துக்கும் உள்ளது என பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்