வயநாட்டில்
ராகுல் காந்தி எம்.பி. பேரணி!
ராகுல்காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார்
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு அபார வெற்ற பெற்றார்.
வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார்
நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்
இந்நிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று வயநாடுக்கு சென்றார்.
இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் சென்ற அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்
மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றவர் அங்கு ரோடு ஷோ நடத்தினார்
சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார்
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live