ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படும் வழக்கம்
1945-ல் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் குழந்தைகள் தக்காளியை வீசியெறிந்து விளையாடியதே இந்த திருவிழாவிற்கான ஆரம்பப்புள்ளி எனக் கூறப்படுகிறது
இந்த திருவிழா பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில், இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா நேற்று நடைபெற்றது
இந்த பாரம்பரிய திருவிழா லா டொமேடினா என்ற பெயரில் நடத்தப்படுகிறது
இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்றனர்
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தலா ஒருவருக்கு ரூ.1,400 (16.70 டாலர் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை
இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்
இந்த தக்காளி திருவிழாவில் வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என 22 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்
இந்த திருவிழாவில்1,50,000 கிலோ கணக்கிலான தக்காளிகளைஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்
இந்த திருவிழாவிற்கு என்றே பிரத்யேகமாக தக்காளிகள் விளைவிக்கப்படுகின்றன
இந்த தக்காளிகள் அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவையாக இருப்பதால், இவை மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல
பின்னர், தெருக்களில்இருந்த தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பாய்ச்சியடித்து, சுத்தம் செய்தனர்
மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம்