டிசம்பர் 26... 'அழியாத வடுக்கள்'- சுனாமியின் 19-ம் ஆண்டு நினைவு தினம்!

19-வது நினைவு தினம் இன்று. மீனவர்கள், பொது மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில்  9.3  ரிக்டர் அளவிற்குப் பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகள் பாதிக்கப்பட்டது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்துக்கு எழுந்தன.

 நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், மீனவர்கள், கடை வைத்துள்ளவர்கள் என நூற்றுக்கணக்கான மக்களை சுனாமி ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது.

சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களையும் இந்த சுனாமி பாதித்தது.

 தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 14 நாடுகளில் சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 பேர் காணாமல் போயினர்.

 ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றனர்.