முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு; கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனா சென்றடைந்தது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சுக் குழு தங்கள் நாட்டுகுள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மாதம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த வாரம் சீன அரசு அனுமதி மறுத்தது.

இதனிடையே நீண்ட இழுபறிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது. சீனாவில் உள்ள வூஹான் சென்ற நிபுணர்கள் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து 2 வார காலம் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு வைரஸ் உருவானது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடரும் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Halley Karthik

உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வருபவர்களை கவரும் ‘ரசிகர்கள் திருவிழா’

G SaravanaKumar

ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி

Arivazhagan Chinnasamy

Leave a Reply