வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது ஏன்?
காட்டு விலங்குகள் சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் நுழைவது அடிக்கடி நிகழ்கிறது.
உண்மையில், 1) விலங்குகள் நடமாடிய பகுதிகளில் நிறைய புதிய குடியிருப்புகள், 2) புதிய சுற்றுலா விடுதிகள், 3) காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு அவற்றின் வாழ்விடங்கள் சுருங்கியதும், 4)அவைகள் நடமாடும் பாதைகளின் குறுக்கே நெடுஞ்சாலைகள் அமைத்ததும் முக்கிய காரணங்கள்.
வனத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல், அவற்றைதேடி யானைகள் ஊருக்குள் வருகின்றன.
ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக வந்த வலசைப்பாதைகள் குடியிருப்புகளாக மாறியதால் குழப்பமடைந்து ஊருக்குள் நுழைவது.
மேலும் எளிதாக கிடைக்கும் உணவுக்காக வந்த இடத்தில் இருந்து மாறாமல் அங்கேயே சுற்றிவருவது.
யானைகளை பட்டாசு வெடித்தோ, அடித்து துன்புறுத்தியோ வனத்துக்குள் அனுப்பக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் யானைகள் ஊருக்குள் வரும்போதும் வனத் துறைக்கு சவாலாக அமைகிறாது.
மனித தவறுகளால் மட்டுமே விலங்குகள் மனிதர்கள் மோதிக்கொள்ளும் அவலம் நிகழ்கிறது.
அரசும் மக்களும் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகளால் மட்டுமே இதனை சரி செய்யமுடியும்.