பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஏன் தெரியுமா?
ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை ஆகஸ்ட் 6 அன்று பதிவு செய்த ஒரு நாள் கழித்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம்
ஹரியானாவைச் சேர்ந்த 29 வயதான வினோத் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது
அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் எடையுடன் காணப்பட்டதால் அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போட்டியின் விதிகளின்படி, மல்யுத்த வீரர்கள் ஆரம்ப சுற்றின் காலையிலும், இறுதிப் போட்டியின் காலையிலும் தங்கள் எடையைக் காட்ட வேண்டும்.
செவ்வாயன்று அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடைக்குள் இருந்தார். பின் அவர் மூன்று போட்டிகளை எதிர்கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் எடை கூடியுள்ளது.
100 கிராம் எடை பிரச்சனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்து இருக்கிறது.