எந்த சமரசமும் இல்லாமல் திரைத்துறைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த படைப்பாளி பாலுமகேந்திரா பிறந்த நாள் இன்று.
இயக்குநர், ஒளிப்பதிவாளர் எனப் பல வித்தைகளில் வித்தகராக வாழ்ந்தவர் பாலு மகேந்திரா.
இலங்கையில் பிறந்து மலையாளத் திரையுலகில் கால் தடம் பதித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார்.
1977 ஆம் ஆண்டு வெளியான கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராக உருவெடுத்தார்.
இளையராஜாவும், பாலு மகேந்திரா இணைந்தால் அங்குக் கண்டிப்பாக மேஜிக் நடக்கும். அந்த மாயாஜாலத்தில் சிக்கித் தவிக்காத இசை பிரியர்களே இருக்க முடியாது.
பலர் சினிமாவை வணிகமாகப் பார்த்தாலும், பாலுமகேந்திராவின் கோணத்தில் சினிமா எப்போதும் ஆகச்சிறந்த கலை தான்.
தனது வாழ்நாளில் பாதி நாட்களை சினிமாவிற்காக அர்ப்பணித்த படைப்பாளி இவர்.
இவருடைய சீடர்களான பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன், ராம் போன்றோர் இப்போதும் தமிழ் சினிமாவிற்கு பாலுமகேந்திராவின் கனவு நனவாக்கி வருகின்றனர்.
தனக்கென ஒரு பாதையை வகுத்து எதார்த்த சினிமாவை மக்களுக்கு அர்ப்பணித்த இவர் என்றும் அழியா கலைஞனாக மக்கள் உள்ளத்தில் வாழ்கிறார்