நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பீகாரில் கடந்த 5ம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்டது நாளந்தா பல்கலைகழகம்.

சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12 ஆம் நூற்றாண்டில் அழிந்தது.

பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.  

ரூ.1749 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர்,  முதலமைச்சர் நிதீஷ் குமார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்

திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். 

நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். 

பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016-ம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.