பெரியாரின் சிந்தனைகள்  

பிறந்தநாள் சிறப்பு

யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!

ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்!

சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி;  சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை

மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்

ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்

ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல,  புரட்சி செய்ய...

மதம் மனிதனை  மிருகமாக்கும்;  சாதி மனிதனை சாக்கடையாக்கும்

யார் கடவுள்? பக்திக்கு பலி கேட்பவனா பசிக்கு உணவளிப்பான்? சிந்தித்துப்பார்...

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவு தன்மையுமே  தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்

அச்சத்துக்கும்  அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்

விதியை நம்பி  மதியை இழக்காதே!

கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன்  ஒரு மனிதனை மற்ற  மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது?

சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை  என் சிந்தனைகள்  தொடரும்

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live