பாரிஸ் ஒலிம்பிக் போட்டி  இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த மனு பாக்கர்!

 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ்  நகரில் ஜூலை 26ம் தேதி கோலாகலமாக  தொடங்கியது

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றது

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கப் பதக்கத்தை வென்றது

பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்

இதில் மனு பாக்கர், 221.7 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்

12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது

கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளன

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பாராட்டினார்