பறிபோன ஒலிம்பிக் பதக்க கனவு... ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

33-வது ஒலிம்பிக் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்

இந்திய தரப்பில் 117 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது

பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கினார்

ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு சாதனை படைத்துள்ளார்

ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்

அவர் இறுதிப்போட்டியில்  விளையாட இருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டர்

இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு வழங்கப்பட்டது

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live