மீன் வகைகளும் மருத்துவ குணங்களும்

சூரை மீன் செலினியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நியாசின் போன்றவை உள்ளதால், இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது

சாளை மீன் அயோடின் அதிகம் இருப்பதால், நோய் ஏற்படுவதை தடுக்க வாய்ப்பிருக்கிறது

அயிலை மீன்  புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இதயத்தில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது

காரல் மீன் பெண்களுக்கு பிரசவ ஜன்னி வருவதை தடுக்க உணவாக எடுத்துக்கொள்ளலாம்

நெத்திலி மீன் கால்சியம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது

நெத்திலி மீன்களில்  இருக்கும் பொட்டாசிய தாதுச்சத்து உணவு செரிமானத்தை மேம்படுத்தவும், தசை செயல்பாடுகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது

காரல் மீனை சூப் வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாவதுடன் சளி தொல்லை நீங்கும்

வாளை மீன்   கருவாடு பித்தம் மற்றும் வாதம்  ஆகியவற்றை அகற்றி பசி உணர்வை தூண்டும் ஆற்றல் கொண்டது