மிக நீண்ட தூர விமானப் பயணம்... எத்தனை மணிநேரம் தெரியுமா?
பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, சில மணி நேரங்களில் கடக்க விமானங்கள் பயன்படுகின்றன
நியூயார்க் - சிங்கப்பூர் 9,537 மைல்கள் 15,348 கிலோ மீட்டர்
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 18 மணி நேரம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடையும்
இதுவே கிலோ மீட்டர் அடிப்படையில் மிக நீண்ட தூர விமானப் பாதையாகும்
நியூயார்க்கின் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு புறப்படுகிறது.
9,523 மைல்களை 18 மணி நேரம் 45 நிமிடங்களில் வந்தடைந்தது. இது உலகின் இரண்டாவது மிக நீளமான விமானப் பாதையாகும்
உலகின் மூன்றாவது பெரிய விமானப் பாதை தோஹா முதல் ஆக்லாந்து வரை ஆகும். கத்தார் ஏர்பஸ் தோஹாவிலிருந்து 17 மணி நேரம் 35 நிமிட பயணத்திற்குப் பிறகு ஆக்லாந்தை அடைந்தது
லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் வரை கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. இதற்கான பயண நேரம் 17 மணி 20 நிமிடங்கள் ஆகும். 4வது பெரிய விமான பாதை
மெல்போர்னில் இருந்து டல்லாஸ் வரையிலான விமானம் 8,992 மைல்கள் அதாவது 14,471 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது
இது உலகின் ஐந்தாவது மிக நீண்ட விமானப் பாதையாகும். இதற்கு 17 மணி 20 நிமிடங்கள் ஆகும்
ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் விமானம், நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியது
8,828 மைல்களை கடந்தது. இது உலகின் ஆறாவது மிக நீளமான விமானப் பாதையாகும்