ஆகஸ்ட் 26 சர்வதேச நாய்கள் தினம்
கிராமங்கள் ஆனாலும் சரி, நகரங்கள் ஆனாலும் சரி மக்களின் செல்லப்பிராணி வளர்ப்பின் முதல் தேர்வாக பெரும்பாலும், நாய் இருக்கும்
நாய் என்றால் நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல, பாதுகாப்பானது அன்பு கொண்டது
சர்வதேச நாய் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது
ஆதரவற்று இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதை மக்களிடையே ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்
சர்வதேச நாய் தினத்தை விலங்குகள் மீட்பு வழக்கறிஞர், நாய் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளரான Colleen Paige என்பவர் கடந்த 2004ல் அறிமுகப்படுத்தினார்
இந்தியாவில் ஏறக்குறைய 20 மில்லியன் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 10% மட்டுமே கிருமி நீக்கம் செய்யப்பட்டு நோய்த்தடுப்புச் செய்யப்பட்டுள்ளன
நாட்டில் தேவைப்படும் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையோ சுமார் 1 லட்சத்திற்கும் மேல்
ஆனால் சமீபத்திய தரவுகளின்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை 63,000 மட்டுமே உள்ளன