பெண்களுக்கான  8 முக்கிய  மத்திய அரசு திட்டங்கள்

1. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BETI BACHAO BETI PADHAO)

பெண்களுக்கான இந்த திட்டம், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பை, கல்வியை உறுதி செய்வது,  பாலின விகிதம் குறைந்து வருவதை நிவர்த்தி செய்கிறது

2.  பிரதமரின் தாய்மை வந்தனா திட்டம் (PRADHAN MANTRI MATRU VANDANA YOJANA)

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊதிய  இழப்பீடு,  முறையான ஓய்வு, சுகப்பிரசவம் மற்றும் நல்ல ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளுக்காக 3 தவணைகளாக ₹5,000 நிதியுதவி

3. ஒற்றை நிறுத்த மையத் திட்டம் (ONE STOP CENTRE SCHEME)

பாலின வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல் உதவி, ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது

4. சுகன்யா சம்ரித்தி  திட்டம் (SUKANYA  SAMRIDDHI YOJANA)

 பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கான சேமிப்புத் திட்டமாகும்

5. பிரதமரின் உஜ்வாலா திட்டம் (PRADHAN MANTRI UJJWALA YOJANA)

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு (LPG)  இணைப்புகளை  வழங்குகிறது

 6. மகிளா இ-ஹாட் திட்டம் (MAHILA E-HAAT)

மகிளா இ-ஹாட் என்பது இணையதளம் மூலம் பெண் தொழில்முனைவோர் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை

7. ராஷ்ட்ரிய மகிளா கோஷ் (RASHTRIYA MAHILA KOSH)

பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி வழங்குவதன் மூலமும், பொருளாதார தன்னிறைவை ஊக்குவிப்பதன் மூலமும்  உதவுவதே நோக்கமாகும்

8. மகிளா சக்தி கேந்திரா (MAHILA SHAKTI KENDRA)

கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு,  டிஜிட்டல் கல்வியறிவு,  வாய்ப்புகளை மேம்படுத்துவதே  இந்த திட்டம்  நோக்கமாகக்  கொண்டுள்ளது

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live