உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவின் 125 வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது

325 ரகங்களில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இந்த ஆண்டு சிறப்பம்சமாக 45 அடி உயரத்தில் 80 ஆயிரம் சிவப்பு, வெள்ளை கார்னேஷன் மலர்களை கொண்டு தோகை விரித்தாடும் பிரமாண்ட மயில் வடிவமைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களை கண்டு ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.