ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ’து ஜூத்தி மே மக்கார்’ திரைப்படம் நேற்று வெளியான முதல் நாளில் ரூ.15.73 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் மற்றும் அனுபவ் சிங் பாஸி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ’து ஜூத்தி மே மக்கார்’. இந்தப் படத்தை லவ் ரஞ்சன் இயக்கியுள்ளார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்தியா முழுவதும் நேற்று வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரிலீசான முதல் நாளே ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று முதல் நாளில் மட்டும் 15.73 கோடியை வசூலித்துள்ளது. ரொமாண்டிக் – காமெடி பிரிவில் வெளியான முதல் நாளில் அதிக வசூலை குவித்த முதல் படமாக ’து ஜூத்தி மே மக்கார்’ உள்ளது. இதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு அனுஷ்கா சர்மா-ஷாருக்கான் நடிப்பில் உருவான ”ஜாப் ஹாரி மெட் செஜல்” திரைப்படம் 15.25 கோடி ரூபாயை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி : இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெறுவது எப்படி?
ஹோலி பண்டிகை விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளில் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக சினிமா ஆர்வலர்கள் கூறினர். இதனால் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.