வாகனம்

SSC Tuatara: உலகின் அதிவேக கார் இதுதான் – முந்தைய அனைத்து சாதனைகளும் முறியடிப்பு!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் ஒன்று உலகின் அதிவேக காரை தயாரித்து அசத்தியிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல உலக சாதனைகளையும் தகர்க்த்தெறிந்துள்ளது.

வெறும் 24 ஊழியர்களுடன் SSC North America என்றழைக்கப்படும் ஆட்டோமொபைல் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 1998ம் ஆண்டு Shelby SuperCars Inc. என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தயாரித்துள்ள  SSC Tuatara என்ற பந்தய மாடல் கார், உலகின் அதிவேக கார் என்ற உலக சாதனையை படைத்திருந்த  Bugatti Chiron Supersport 300+ காரின் சாதனையை முறியடித்திருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் மூலம் தயாரிப்பில் உள்ள உலகின் அதிவேக மாடல் என்ற உலக சாதனையையும் SSC Tuatara தன்வசமாக்கியிருக்கிறது. லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஆலிவர் வெப் எனும் அனுபவ ஓட்டுநர் இக்காரை மணிக்கு 508.73 கிமீ வேகத்தில் செலுத்தியிருக்கிறார். முன்னதாக Bugatti Chiron Supersport 300+ கார் 490.48 கிமீ வேகத்தில் சென்றதே அதிவேக சாதனையாக இருந்தது.

இக்காரில் ட்வின் டர்போ 5.9 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 1,750 hp பவரை வழங்குகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இக்காரின் எடை 1,247 கிலோவாகும்.

உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்ததுடன் மேலும் 3 சாதனைகளையும் இக்கார் தகர்த்தெறிந்துள்ளது. அவை

01. “Fastest Flying Mile on a Public Road” at 313.12 mph (503.92 kph)

02. “Fastest Flying Kilometre on a Public Road” at 517.16 kph

03. “Highest Speed Achieved on a Public Road” at 532.93 kph

உலகின் அதிவேக கார் என்பதால் மொத்தமே 100 என்ற எண்ணிக்கையிலான SSC Tuatara கார்களை தயாரிக்க SSC North America நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இக்காரின் விலை 1.6 மில்லியன் டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய்க்கு சற்று அதிகம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம்!

எல்.ரேணுகாதேவி

ரூ.30,000 முதல் 10 லட்சம் வரை: விற்பனைக்கு களமிறங்கும் KTM சைக்கிள்கள்!

Arun

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை

Niruban Chakkaaravarthi

Leave a Reply