முக்கியச் செய்திகள் இந்தியா

Silhouette Photography மூலம் இணையத்தை கலக்கும் இளைஞர்!

நீங்கள் தினமும் சாதாரணமாக பார்க்கும் சில விஷயங்களை கேமரா வழியாக வேறு விதமாக பார்த்து க்ளிக் செய்யும் மகாராஷ்டிர இளைஞர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாராஷ்டிராவில் வசிக்கும் 19 வயது இளைஞர் கிருதிக் பாரத் தாகூர், பெரும்பாலான நேரங்களில் கேமராவுடன் தான் வலம் வருவார். குறிப்பாக சூரியன் தான் இவரது புகைப்படங்களுக்கு முக்கிய டார்கெட். சாதாரண நிகழ்வு என நினைத்து நாம் கடந்து செல்லும் பல நிகழ்வுகளை இவரது கேமரா வேறு கோணத்தில் அழகாக படம்பிடித்து விடுகிறது. Silhouette Photography தான் கிருதிக் தாகூரின் ஸ்டைல்.

Silhouette Photography மூலம் எடுக்கப்பட்ட புகைப்படமே அதன் கதையை பேசும். தங்களை சுற்றி இருக்கும் பொருட்களை வைத்து அதனை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி க்ளிக் செய்வார்கள். உதாரணத்திற்கு இரண்டு பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், சூரியன் பந்தாக இருப்பது போல் தெரியுமாறு அதனை எடுப்பார்கள். புகைப்படம் எடுப்பவரின் கற்பனை திறனை பொறுத்தே இதற்கு கூடுதல் அழகு சேர்க்க முடியும். இதில் உருவம் முழுமையாக தெரியாது. Shadow image போல் மட்டுமே இருக்கும். வானம், சூரியன் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே கண்களை கவரும் நிறத்தில் காண்பித்திருப்பார்கள். இந்த புகைப்படங்கள் பெரும்பாலும் கருப்பு நிறத்தை மையமாக வைத்தே எடுக்கப்படும்.

அந்தவகையில் கிருதிக் தாகூர் சூரியனை தேர்வு செய்துள்ளார். தனது புகைப்படத்தில் சூரியனை வைத்து விளையாடுகிறார். அவரது புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி

Vandhana

ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நிதியளித்த கவுதம் கம்பீர்

Saravana

விஸ்வரூபம் எடுக்கும் அணு உலை வழக்கு

Halley Karthik

Leave a Reply