தொழில்நுட்பம்

Sennheiser CX 400BT: இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

sennheiser CX 400BT வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 16,990. இதன் விலைக்கு ஏற்ற மாதிரி இதில் பல்வேறு சிறப்பம்சங்களும் காணப்படுகிறது. குறிப்பாக இதில் உள்ள Active noise cancellation வசதி மூலம் இயர்போன்ஸ் பயன்படுத்தும் போது உங்கள் காதில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

sennheiser நிறுவனம் இதுவரை இந்தியாவில் மூன்று வயர்லெஸ் இயர்போன்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. அதில் CX 400BT மட்டுமே குறைவான விலைக்கு சந்தைக்கு வந்துள்ளது. இதன் மேற்பரப்பில் அதன் லோகோ மற்றும் Touch control panel காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு பெரிதாக இருப்பது போல் தெரிந்தாலும், இதனை பயன்படுத்தும் போது மிகவும் வசதியாக இருக்கும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் அதில் water resistance இல்லாதது ஒரு குறைதான்.

இயர்போன்களிலேயே Volume, call என அனைத்தையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கான ஒரு மொபைல் செயலி ஒன்றும் உள்ளது. அதனை பயன்படுத்தியும் நீங்கள் இதனை இயக்க முடியும். இதனை சார்ஜ் செய்து கொள்வதற்கு Type-C Port கொடுக்கப்பட்டுள்ளது. இதன் earbud 6 கிராம் எடையும், case 37 கிராம் எடையும் கொண்டது. இதனை இணைப்பதற்கு Bluetooth 5.1 பயன்படுத்தப்படுகிறது. மேலும் 5-21,000Hz அதிர்வெண் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இயர்போன்களில் பாடல்கள் கேட்பதற்கும் இனிமையாக இருப்பதாக கூறுகின்றனர்.குறிப்பாக Youtube மற்றும் spotify பயன்படுத்தும் போது இதில் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் அது பெரிய பிரச்சனையாக தெரியாத அளவுக்கு இது சிறப்பாக செயல்படுவதாகவும் கூறுகின்றனர். தற்போது இதனை ஏராளமானோர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முகம் பார்த்திராத முகநூல் காதல்; காதலி இறந்ததால் காதலனும் உயிரிழப்பு

G SaravanaKumar

புதிய லேப்டாப் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

Arivazhagan Chinnasamy

கூகுள் பே கண்காணிக்கப்படும்: சத்திய பிரதா சாகு

Niruban Chakkaaravarthi

Leave a Reply