தமிழகம்

சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதி!

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்ப சுவாமியை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் ஆண்டு தோறும் ஜனவரி 14ம் தேதி மாலை மகரஜோதி வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஜோதி வடிவாய் காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதங்களுடன் சபரிமலையில் திரண்டு தரிசித்து செல்வர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 5ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்திக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மன்னர் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற தேவசம் போர்டு அதிகாரிகள், தந்திரி, மேல்சாந்தியிடம் வழங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீபராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டதையடுத்து, நேற்று மாலை சரியாக 6.45 மணியளவில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ரூபத்தில் மூன்று முறை சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க பக்தர்கள் ஐயப்பனை பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

EZHILARASAN D

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முதலமைச்சரின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

Jeba Arul Robinson

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தூய்மைப் பணியாளர் சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

G SaravanaKumar

Leave a Reply