டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் வார இறுதி நாளான இன்று (மே 15) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை கண்டுள்ளது.

ஈரான் போரினால் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணிகளால் இன்று ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்தியா ரூபாயில் 95 ரூபாய் 96 காசாக உள்ளது.

இதனால் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், தங்கம், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 3.4 சதவீதம் உயர்த்தியுள்ளது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.