முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

வசூலில் புதிய சாதனை படைத்த `பதான்’

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பதான்’ திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த ‘பதான்’ படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி உடை, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த எதிர்ப்புகளை மீறி வெளியான ‘பதான்’ படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்தது.

அண்மைச் செய்தி:’நொய்யல் ஆற்றை மீட்க கையெழுத்து இயக்கம்’ – செளமியா அன்புமணி அறிவிப்பு

இந்த நிலையில் பதான் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் கூறுகையில், உலக அளவில் பதான் திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா: 2-ம் நாள் அஸ்திரதேவர் ஊர்வலம்!

Web Editor

மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் பணியிடை நீக்கம்

Jeba Arul Robinson

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுபடி பத்து மடங்கு உயர்வு-அரசாணை வெளியீடு

Web Editor