முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்; மும்பையில் அரங்கேறிய கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓடும் புறநகர் ரயிலில் இருந்து தனது மனைவியை தள்ளிவிட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மன்கூர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் கடந்த திங்களன்று தனது மனைவியுடன் புறநகர் ரயிலில் சென்றுள்ளார். அப்போது தனது மனைவியை ரயில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்துள்ள காவல்துறையினர் 31 வயதான அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளதாகவும் அந்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என தெரிவித்துள்ளனர். அந்த நபர் தனது மனைவியை செம்பூர் மற்றும் கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தள்ளிவிட்டதாகவும் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூரியனை விட 5 மடங்கு வெப்பம்: செயற்கை சூரியனை கண்டுபிடித்த சீனா

EZHILARASAN D

2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!

Jayapriya

டென்னிஸ் தரவரிசை: ரபேல் நடால் முன்னேற்றம்

Web Editor

Leave a Reply