முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

கே.எல்.ராகுல் திருமணம் – ரூ.2.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி

கே.எல்.ராகுல்-அதிஷா ஷெட்டி தம்பதியருக்கு விலையுயர்ந்த பரிசுகளை எம்.எஸ்.தோனியும் விராட் கோலியும் வழங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு சுனில் ஷெட்டியின் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, கடந்த 23-ம் தேதி  மஹாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் என 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரரான விராட் கோலி ஆகிய இருவரும் கே.எல்.ராகுலுக்கு அளித்துள்ள திருமண பரிசு தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை கே.எல்.ராகுலுக்கு வழங்கியுள்ளனர்.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 80 லட்ச ரூபாய் மதிப்பிலான கவாஸ்கி நின்ஜா பைக்கை வழங்கியுள்ளார். விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி, சுமார் 2.70 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளனர்.

எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய போதுதான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு – யார் யாருக்கெல்லாம் விருது?

Web Editor

‘திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றிருக்க வேண்டும்’

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

EZHILARASAN D