தொழில்நுட்பம்

Moto G 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: இதன் விலை, சிறப்பம்சங்கள் என்ன?

Moto G 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Motorola Moto G 5G ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் இதுதான் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தக தளமான Flipkart-ல் இதனை புக் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5,000 mAh பேட்டரி வசதி கொண்ட இந்த போனில் Qualcomm Snapdragon 750G சிப் கொடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஸ்மார்ட் போன் கடந்த மாதமே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. 6GB RAM மற்றும் 128GB ROM கொண்ட இது இந்தியாவில் ரூ.20,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இதன் MRP விலை ரூ.24,999 என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்புறத்தில் Triple கேமரா வசதி கொண்ட இதில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதி இருக்கிறது. 6.7 இன்ச் தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

128GB Storage கொடுக்கப்பட்டிருந்தாலும், இதனை 1 TB வரை அதிகரிக்க முடியும். இந்த 5ஜி ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’water resistant’ ஐபோன்: ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம்!

Dhamotharan

ஆட்டத்தை மீண்டும் தொடங்கும் ’பப்ஜி’: நாளை முதல் ’பேட்டில்கிரவுண்ட்’!

Halley Karthik

அலெக்சாவிடம் 19,000 முறை ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!

Jeba Arul Robinson

Leave a Reply