போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி தங்கை கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை ராக்கி கட்டி உறுதி செய்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் வேதாளம். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும், தங்கை கதாப்பாத்திரத்தில் லஷ்மி மேனனும் நடித்திருந்தனர். இந்த படம் அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் ஆகும் இந்த படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். படத்தில் அஜித் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். அவரது தங்கை கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், ரக்ஷ பந்தன் தினமான நேற்று சிரஞ்சீவிக்கு கீர்த்தி சுரேஷ் ராக்கி கட்டுவதை போன்ற புகைப்படம் அடங்கிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.