ஆசிய விளையாட்டு 100 மீட்டர் தடையோட்டப் பந்தயத்தில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோதி யார்ராஜி களம் கண்டார். பந்தயம் தொடங்கிய மறு நொடியே சீன வீராங்கனை வு யான்னி தவறான தொடக்கத்தை தொடங்கினார். அவருக்கு இடப்புறமாக இருந்த ஜோதி யார்ராஜி, சீன வீராங்கனி வு வின் ஆரம்பத்தை பின்பற்றி தனது ஓட்டத்தை தொடங்கினார். ஜோதி யார்ராஜியின் தொடக்கம், அவர் திட்டமிட்டதை விட குறைவாகவே இருந்தது, இருப்பினும் யார்ராஜி 12.91 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி மூன்றாமிடம் பிடித்தார்.
இருப்பினும் போட்டி முடிந்த பின்னர், போட்டி நடுவர்கள் ஜோதி யார்ராஜி மற்றும் சீன வீராங்கனை யான்னி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அழைத்தனர். அதிகாரிகளுடனான நீண்ட ஆலோசனைக்கு பிறகாக வு மற்றும் யார்ராஜி ஆகியோரின் தொடக்க நிகழ்வை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது ஜோதி யார்ராஜியின் தொடக்கம், சீனாவின் வு யான்னியை விட குறைவாகவே இருந்தது. அதாவது அவர் எந்த தவறும் செய்யவில்லை. சீனாவின் வு யான்னி தவறான தொடக்கம் முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. யார்ராஜி மூன்றாமிடம் பிடித்திருந்ததை அடுத்து அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதி ஆகியிருந்தாலும், அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர் யார்ராஜி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
12.91 வினாடிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த யார்ராஜியின் ஓட்டமும், சீன வீராங்கனை வு வின் ஓட்டமும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச தடகள விதிகளின் படி TR16.8 [தவறான தொடக்கங்கள் தொடர்பான விதி] படி சீன வீராங்கனை இரண்டாமிடம் பிடித்த வு யான்னி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே மூன்றாம் இடம் பிடித்த யர்ராஜிக்கு இரண்டாமிடம் கொடுக்கப்பட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.