ஆன்லைன் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக தமிழ்நாடு அரசின் சட்டம் எப்படி வகைப்படுத்தியது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகளை தொடர்ந்தே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறினார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தமிழ்நாடு அரசின் சட்டம் ஆன்லைன் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், ரம்மியை நேரடியாக விளையாடும் போது தான் அது திறமைக்கான விளையாட்டு என விளக்கம் அளித்தார். தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆன் லைனில் ரம்மியை விளையாடினால், அது அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாறும் என்பதை ஏற்க இயலாது எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மற்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் பதில் வாதத்திற்காக வழக்கின் விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.