ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியில் அதிகபட்சமாக நமன் திர் 57 (37 )ரன்களும், ரியான் ரிக்கல்டன் 37 (24) ரன்களும் விளாசினர்.
சென்னை அணியில் சிறப்பாக் பந்து வீசிய அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.




