புதிய எதிர்காலத்தை உருவாக்க கடுமையாக உழைப்பேன் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பிறந்துள்ள இந்த புதிய ஆண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தாண்டிக்கு உலக தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே புயல் பாதிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வரும் வடகொரிய மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக அவர் வடகொரிய மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடுமையான காலத்தில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். புதிய ஆண்டிலும், எங்கள் மக்களின் லட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும், புதிய சகாப்தத்தை கொண்டுவருவதற்கு நான் கடுமையாக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.