முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

”அயலக தமிழர்களை பண்பாட்டு தூதர்களாக பார்க்கிறேன்”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டதை போல இன்று அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம்.

வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சி அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான், தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அயலக தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் பேசியதாவது:

வணிகம், வாழ்கை என பல காரணங்களுக்காக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், அவர்களுக்கு தாய்வீடு தமிழ்நாடு தான் எனவும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் அரசாக திமுக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். 2011ல் வெளிநாடு வாழ் தமிழர் நல சட்டம் இயற்றப்பட்டது, அதே போல் அதற்கென்ற ஒரு வாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்ததை ஆட்சி மாற்றத்தால் செய்ய முடியவில்லை எனவும் தற்போது அதை செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அயலக தமிழர்களை தமிழ்நாட்டின் பண்பாட்டு தூதர்களாக பார்ப்பதாக தெரிவித்த அவர், கீழடி ஆதிச்சநல்லூரை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் என அவர் வலியுறுத்தினார்.

அயலக தமிழர்களின் சலுகைகளாக, 317 கோடியில் இலங்கை தமிழர்களுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழர்கள் வெளிநாட்டில் பணியின் போது இறக்க நேரிட்டால் கல்வி, திருமண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழர்களை பிளவு படுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ள வேண்டும் எனக் கூறிய அவர், திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் நலனுக்கான ஆட்சியாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

முழு ஊரடங்கிற்குத் தயாராகும் மகாராஷ்டிரா மாநிலம்!

Halley Karthik

இந்தியா- இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தள்ளிவைப்பு

Gayathri Venkatesan

திருப்பூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை – தமிழ்நாடு அரசு

Arivazhagan CM