இந்தியாவின் பிரத்யேக நேவிகேஷன் வழிகாட்டி முறைக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் என்ன இந்தியாவுக்கு என்ன பயன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கோள் பயன்பாடு என்ன?
இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஜிபிஎஸுக்கு (GPS) பதிலாக, இந்தியா, சொந்தமாக இருப்பிடத்தை கண்டறியும் NavIC வழிகாட்டு முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கோள் வரிசையில் ஏ முதல் ஐ வரை விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது இவை பூமியிலிருந்து 36,000 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோள்கள் மூலமாக 1500 கி.மீ. சுற்றளவில் கடல் வழிகளையும், எல்லைகளையும் துல்லியமாக கணிக்க முடியும். அதாவது இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட பிரேத்யேக வழிகாட்டி செயற்கோளாகும். இந்த நேவிக் ( NavIC ) சிஸ்டம் மூலம் எஸ்.பி.எஸ் மற்றும் ஆர்.எஸ். சேவைகளை பெற முடியும். எஸ்.பி.எஸ். சேவைகளை அனைவரும் பயன்படுத்த முடியும். ஆர்.எஸ். சேவைகளை ராணுவ பயன்பாடுகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கடல் எல்லைகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட கடல்பகுதிகளில் முழுமையான கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இந்த நேவிக் வழிகாட்டியை கப்பல்களில் பொருத்தினால், கடல்பரப்பில் அவை எங்கு உள்ளன என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் இந்த பிரத்யேகமான நேவிகேஷன் முறைக்கு தற்போது சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) ஒப்புதல் அளித்துள்ளது. IMO என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமாகும். கடந்த 2 வருடங்களுக்து முன்பு கடல்சார் சமைப்பின் அனுமதிக்காக பதிவு செய்திருந்தது. கடந்த நவம்பர் 4 முதல் 11ம் தேதி வரையில் கடல்சார் அமைப்பின் 102-வது மாநாடு நடைபெற்றது. அப்போது நேவிக் வழிகாட்டு முறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக சொந்தமாக நேவிகேஷன் சிஸ்டம் வைத்திருக்கும் 4வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
இதற்கு முன்னர் வரை அமெரிக்கா(GPS), ரஷ்யா (GLONASS), சீனா(BeiDou) ஆகிய நாடுகள் சொந்தமாக நேவிகேஷன் சிஸ்டம்களுக்கு அனுமதி வாங்கியுள்ளது.இதன் பிறகு, இந்தியர்கள் தங்களுடைய மொபைல் போன் மற்றும் கார்களில் பயன்படுத்தும் இருப்பிடத்தை அறியும் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். இதற்காக இஸ்ரோ தற்போது குவால்காம் போன்ற மொபைல் சிப் உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியிருந்த சில முக்கிய பகுதிகளின் GPS தரவுகளைத் தருமாறு அமெரிக்காவிடம் இந்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அரசு அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இந்தியா தனக்கென பிரத்யேக நேவிகேஷன் சிஸ்டம் ஒன்றை உருவாக்க எடுத்ததன் முடிவே NavIC ஆகும்.