முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்களையும், வீழ்ந்தவர்களையும் பார்ப்போம்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியின் வரலாற்றை அறிவோம். 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிளில் ஒன்றான ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு வட்டத்தில் உள்ள பகுதிகள், பிராமண பெரிய அக்ரஹாரம் பேரூராட்சி, ஈரோடு நகராட்சி மற்றும் வீரப்பன் சத்திரம் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதி தனது முதல் தேர்தலை 2011ஆம் ஆண்டு சந்தித்தது. 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் சட்டமன்ற தேர்தல் – 2011

2011 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக அப்போது இருந்த வி.சி. சந்திர குமார் போட்டியிட்டார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ். முத்துசாமி களம் இறங்கினார். கடும் போட்டி நிலவிய இந்த தொகுதியில் சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் முத்துசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். பாஜக 3 ஆயிரத்து 244 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது.  2வது சட்டமன்றத் தேர்தல் – 2016

2016 சட்டமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியது. இதில் அதிமுக சார்பில் தென்னரசு களம் இறக்கப்பட்டார். தேமுதிகவில் இருந்து விலகி, மக்கள் தேமுதிகவை உருவாக்கி திமுகவுடன் கூட்டணியில் இணைந்த வி.சி. சந்திரகுமார் மீண்டும் அங்கும் களமிறங்கினார். மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக தனியாக களம் கண்டது. அதே போல் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, சமக, பகுஜன் சமாஜ் என தனித்தனியாக கட்சிகள் களம் கண்டன.

இதில் அதிமுக சார்பில் களமிறங்கிய கே.எஸ். தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் களமிறங்கிய சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தேமுதிக சார்பில் களமிறங்கிய பொன் சேர்மன் 6776 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார். 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளுடன் பாஜக 4வது இடத்தைக் கைப்பற்றியது. கொமதேக, நாதக, எஸ்.டி.பி.ஐ, பாமக ஆகிய கட்சிகள் தலா 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளே பெற்றன.

3வது சட்டமன்ற தேர்தல் – 2021

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடி போடி நிலவியது. என்றாலும் நாம் தமிழர், மக்கள் நீதிமையம், அமமுக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடம் இதில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா களமிறக்கப்பட்டார். அதிமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் யுவராஜா களமிறங்கினார். தமாகா இரட்டை இலை சின்னத்திலேயே களமிறங்கியதால் போட்டி கடுமையாக இருந்தது.

இந்தத் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யுவராஜா 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று சுமார் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். நாம் தமிழர் கட்சி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும், 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று மக்கள் நீதி மையம் 4வது இடத்தையும் பிடித்தன. அமமுகவுக்கு ஆயிரத்து 204 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 372 வாக்குகளும் கிடைத்தன.

முதல் இடைத்தேர்தல் – 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. 3 முறை இந்த தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. அதில் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக தனது வெற்றியை அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் தனது வெற்றியை திமுக கூட்டணியிலும் பதிவு செய்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில்  பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்தலுக்கு ஆளும் திமுக கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியும் பலப்பரீட்சைக்கு தயாராகி வருகின்றன. இந்த முறை வெற்றி பெறப்போவது யார்?

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கமல் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி

EZHILARASAN D

இனிதே நடந்து முடிந்த நம்ம ஊரு திருவிழா

G SaravanaKumar

திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி

Halley Karthik