மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடையே நாளை 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களை கடந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை 8 முறை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு ஏதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ள மத்திய அரசு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நான்கு பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடையே 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் நாளை மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.