பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு (பாஃப்டா) உலகம் முழுவதும் கலை துறையில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு இந்தியாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 5 பேரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிக்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கான தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பாஃப்டா உடன் இணைந்து கலை துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 5 கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், பாஃப்டா உடன் இணைந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் உலகமெங்கும் உள்ள திறமைசாலிகள் அங்கீகாரம் பெற இது ஒரு சிறந்த வாய்பு எனவும் தெரிவித்தார்.