முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு – அரசாணை வெளியீடு

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்.

சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் இந்த குழு அமைக்கப்படுவதாக இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி & சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை & இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும்.

சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தான் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி துணைத்தலைவராகவும், மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழுவாக இது செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

Gayathri Venkatesan

தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

Halley karthi

அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??

Saravana Kumar