கட்டுரைகள்

“புகை வரையும் சித்திரங்கள் காற்றால் ஆனவை“; திருக்குறளை வரைந்து அசத்தும் ஓவியர்


ஹேலி கார்த்திக்

கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக்

“அந்த வீடுகள்! அது நமக்கு வெறும் வீடுகள்தான். ஆனால் அவனுக்கு அவை நண்பர்கள். ஒவ்வொருநாளும் தெருவின் திருப்பத்தில் உள்நுழையும்போது பரஸ்பரம் அவனும் அந்த வீடுகளும் நலம் விசாரித்துக்கொள்வார்கள்.” பியோதர் தஸ்தயெவ்ஸ்கி இப்படியான வரிகளை ‘வெண்ணிற இரவுகள்’ கதையில் எழுதியிருப்பார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் ஆச்சரியத்தையும், மன கிளர்ச்சியையும் ஏற்படுத்துவது எழுத்துதான். எழுத்து ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு காட்சி பிம்பத்தை கட்டமைக்கும். ஆனால் திரையிடல்களோ அல்லது புகைப்படங்களோ வெவ்வேறு காட்சிகளை மனிதனுக்கு உருவாக்குவதில்லை. நகல் போன்று மனித கற்பனையை சுருக்கிவிடுகிறது. தஸ்தயெவ்ஸ்கியின் இந்த வரிகள் மனித கற்பனைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றால் அது மிகையில்லை.

இதே கற்பனையை ஓவியமாக மாற்றினால் எப்படியிருக்கும்? அதை நடைமுறைப்படுத்த முயன்று வருபவர்தான் இயல் எனும் இளம் ஓவியர்.

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: ஒற்றாடல் / Detectives குறள் 586: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. மு.வரதராசன் விளக்கம்: துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

தமிழர்களின் புகழ்பெற்ற திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு குறளை ஓவியமாக மொழிபெயர்தால் எப்படியிருக்கும்? அது நிச்சயமாக தஸ்தயெவ்ஸ்கியின் கற்பனைதான். இரு வரிகளை ஓவியமாக்கும் திறன் நிச்சயம் அபாரமான ஒன்றுதான். காற்றில் புகை வரையும் சித்திரம் போல, சுவருடன் ரகசியம் பேசும் குடும்ப பெண்களை போன்றது அது.

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: கொடுங்கோன்மை / The Cruel Sceptre குறள் 560: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

இந்த ஓவியங்கள் குறளுடன் பொருத்தி பார்க்கும்பொது குறள் வேறொரு கோணத்தில் நமக்கு புலப்படுகிறது. இது குறித்து அவரிடம் பேசியபோது,“வார்த்தைகளை ஓவியமாக மாற்றுவது எனக்குள் தீராத ஆவலை ஏற்படுத்தியது. இப்படியாகதான் இந்த துறைக்கு வர நேர்ந்தது. திருக்குறள் உலக பொதுமறை. இந்த பொதுமறைக்கு தனியாக விளக்கங்கள் உள்ளது. இவற்றைக் கடந்து இதனை மேலும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேரக்க வேண்டும் எனும் எண்ணத்தில்தான் திருக்குறளை தேர்ந்தெடுத்தேன்.

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: வெருவந்தசெய்யாமை / Absence of Terrorism குறள் 563: வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குறள்கள் மட்டுமல்லாது, கதைகள், கவிதைகள் உள்ளிட்டவைகளுக்கும் ஓவியங்களை வரைந்துள்ளேன். தவிர்த்து எனது குழந்தையும், எங்கள் கிளியும் சேர்ந்து செய்யும் லூட்டியை ஓவியமாக வரைந்து புத்தகமாக்கியுள்ளேன். இந்த துறையில் சால்வதோர் தாலீ, வான்கோ ஆகியோரின் படைப்புகளை வியந்துள்ளேன்.

பொதுவாக வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிதானதாக தோன்றும் எது ஒன்றும் உண்மையில் அவ்வளவு எளிதல்ல. அதுபோலதான் திருக்குறள் ஓவியமும்.” என்று கூறினார்.

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: ஒற்றாடல் / Detectives குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.

இந்திய சூழலில் ஓவிய துறை குறித்து உங்கள் கருத்து என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தற்போது சமூக வலைத்தளங்கள் காரணமைாக இத்துறை பெரிதும் பொது வெளியில் கவனம் பெற்றுள்ளது. ஒரு காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கண்டு ரசித்த ஓவியங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவருக்குமானதாக மாறியிருக்கிறது.” என்று கூறினார்.

மனிதனின் ஒவ்வொரு பரிணாமத்திற்கும் அடிப்படையாக இருந்தது கற்பனைதான். அந்த வகையில் மனித கற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லமுயலும் இளம் ஓவியர் இயலுக்கு வாழ்த்துகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காசு, பணம், துட்டு… புழக்கத்தில் குறைகிறதா ரூ.2000?

Halley Karthik

இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்

Janani

கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

G SaravanaKumar