முக்கியச் செய்திகள் தமிழகம்

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

தேனியில் மதுபோதையில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த மூதாட்டி யார் என்றும், எதற்காக கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஞாநேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மதுபோதையில் அவர் மூதாட்டியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஞாநேசனை கைது செய்த போலீசார், உயிரிழந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

Karthick

போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!

Ezhilarasan

தமிழக – கேரள எல்லையில் இ.பாஸ் நடைமுறை அமல்!

Karthick