முக்கியச் செய்திகள் தமிழகம்

”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்காக ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பட்டியலை இறுதி செய்யும் போது ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவ காரணங்கள் தவிர பிற காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!

Halley karthi

சிரஞ்சீவிக்கு தங்கையான கீர்த்தி சுரேஷ்

Saravana Kumar

வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்

Gayathri Venkatesan

Leave a Reply