ஒடிசா மாநிலத்தில் 5 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர், பின்னர் இறந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து அம்மாநில அரசின் உத்தரவின் பேரில் ஒடிசா காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த சிறுமியை கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறை சிறப்பு புலனாய்வு அதிகாரி அருண் போத்ரா, சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் சிறுமியை கொலை செய்வதற்கு முன்னர் நாள் குழந்தை ஆபாசப்படங்களை அதிகம் பார்த்ததாகவும் அடுத்த நாள் சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் சிறுமியை கொலை செய்து விட்டு அந்த உடலை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறையின் இந்த புகாரை மறுத்துள்ள அந்த இளைஞரின் தாய், தனது மகன் ஒரு அப்பாவி எனவும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் தனது மகனை சித்தரவதை செய்து பழியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.