முக்கியச் செய்திகள் தமிழகம்

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25). இவரது மனைவி கரி சுல்தான் (23) .மகா வைகுண்டம் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஐந்து ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் இவர்களது வீடு திறக்கப்படாமல் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது மகா வைகுண்டமும், கரி சுல்தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணப் பிரச்சனை எதுவும் இவர்களுக்கு இல்லாததால், குழந்தையின்மை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கருப்பு பூஞ்சையை தடுப்பதில் கவனம் தேவை: பிரதமர்!

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

Jeba Arul Robinson

தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan

Leave a Reply